கணவருடன் சென்று பிக்பாஸ் 4 போட்டியாளரை சந்தித்துள்ளார் தாமரைச்செல்வி.

Thamarai Selvi With Suresh Chakravarthy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நாடக கலைஞர் தாமரைச்செல்வி.

கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் 4 போட்டியாளரை சந்தித்த தாமரைச்செல்வி.. அவர் கொடுத்த கிப்ட்டை பாருங்க - வைரலாகும் வீடியோ

இவருடைய யதார்த்தமான பேச்சு கள்ளம் கபடமற்ற செயல்களால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தொன்னூற்று ஆறு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடைசி எலிமினேஷனில் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தாமரைச்செல்வி ஐக்கி பெர்ரி உடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் 4 போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை தனது கணவருடன் நேரில் சந்தித்து உள்ளார்.

கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் 4 போட்டியாளரை சந்தித்த தாமரைச்செல்வி.. அவர் கொடுத்த கிப்ட்டை பாருங்க - வைரலாகும் வீடியோ

சுரேஷ் சக்ரவர்த்தி தன்னுடைய மனைவியுடன் தாமரைச்செல்வி யையும் அவரது கணவரையும் ஆசிர்வாதம் செய்து அவர்களுக்கு புதிய உடைகளை கொடுத்து வாழ்த்தியுள்ளார். இவர்களுடன் ஐக்கி பெர்ரியும் சென்றுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.