ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் பிக்பாஸ் தாமரைச்செல்வி.

Thamarai Selvi Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த வாரத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இது போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றனர் நாடக கலைஞர் தாமரைச்செல்வி.

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் தாமரைச்செல்வி.. இவங்களா இப்படி? வைரலாகும் வீடியோ

யதார்த்தமான பேச்சு, நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இருப்பினும் இவரது கோபத்தால் பிறகு வெறுப்பையும் சம்பாதிக்க தொடங்கினார். கிட்டத்தட்ட தொண்ணூத்தி ஆறு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த தாமரைச்செல்வி கடைசி எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் சமீபத்தில் ஐக்கி பெர்ரியை சந்தித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் தாமரைச்செல்வி.. இவங்களா இப்படி? வைரலாகும் வீடியோ