பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பாசத்தைக் கொட்டிய ராஜூ வெளியே வந்து தன்னை கண்டுகொள்ளவில்லை என தாமரைச்செல்வி கூறியுள்ளார்.

Thamarai Selvi About Raju : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரைச்செல்வி. இவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

ராஜுவா இப்படி? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நடந்த விஷயம்.. அல்டிமேட் வீட்டில் உண்மையை உடைத்த தாமரைச்செல்வி - வீடியோ

இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நன்றாக பேசி விட்டு வெளியே வந்ததும் தன்னை கண்டு கொள்ளக் கூட இல்லை என கூறினார். உன்னை இங்க கூட்டிட்டு போறாங்க கூட்டிட்டு போறேன் என சொன்னதெல்லாம் பொய்யா போயிடுச்சு என பேசியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜூலியுடன் ராஜு வீட்டிற்குள் இருக்கும் போது அவ்வளவு நன்றாக பழகினான். நான் என்னுடைய மூத்த பையன் மாதிரி நினைத்தேன். ஆனால் வெளியே போன பிறகு எனக்கு ஒரு போன் கூட பண்ணி பேசல எல்லாம் அப்படியே மாறிப் போச்சு என வருத்தப்பட்டு கூறியுள்ளார். ஐக்கிய, மற்றும் இமான் அண்ணாச்சி தான் தனக்கு போன் செய்து பேசினார்கள்.

ராஜுவா இப்படி? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நடந்த விஷயம்.. அல்டிமேட் வீட்டில் உண்மையை உடைத்த தாமரைச்செல்வி - வீடியோ

அவ்வளவு பழகிட்டு எப்படி இப்படி மாறிட்டாங்க என நினைத்து நான் பல நாள் தூங்காமல் இருந்தேன் என் வீட்டுக்காரர் இவளுக்கு என்னமோ ஆயிடுச்சுனு பயந்து விட்டார் என கூற ஜூலியும் நானும் முதல் சீசனில் இப்படித்தான் ஒன்றுமே தெரியாமல் வந்து ஏமாந்தேன் என கூறியுள்ளார்.

https://twitter.com/inferna63786672/status/1493420516065091590?t=Gy3wXotJkLhiefsUsfnZVw&s=19