பிரியங்கா பண்ணியது எல்லாமே வெறும் நடிப்பு என பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவரின் முகத்திரையை கிழித்துள்ளார் தாமரைச்செல்வி.

Thamarai Selvi About Priyanka : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் தாமரைச்செல்வி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவருக்கும் பிரியங்காவுக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவானது.

பிரியங்கா பண்ணது எல்லாமே நடிப்பு.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முகத்திரையை கிழித்த தாமரைச்செல்வி - இப்படியான நடந்துச்சு?

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காடர்ன் ஏரியாவில் அமர்ந்து பேசும்போது பிரியங்கா குறித்த உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் தாமரைச்செல்வி. பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும்போது பிரியங்கா பாசம் காட்டுற மாதிரி இருந்தாங்க. நான் உன்னை இங்க கூட்டிட்டு போறேன் எங்க கூட்டிட்டு போறேன் என சொன்னாங்க. ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்படியே மறந்து விட்டார் என கூறியுள்ளார்.

அவர் பெரிய பிரபலம் என்பதால் அவருடைய நம்பர் என்னிடம் இல்லை. ஆனால் அவர் என்னுடைய நம்பரை வாங்கி பேசி இருக்கலாம். பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சியில் நான் போய் அவரிடம் பேசிய அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. பிரியங்கா பசிக்குதுன்னு சொன்னா என்னால் தாங்க முடியாது. ஆனா நான் எல்லோரையும் என் குடும்பமாக தான் நினைத்தேன்.

பிரியங்கா பண்ணது எல்லாமே நடிப்பு.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முகத்திரையை கிழித்த தாமரைச்செல்வி - இப்படியான நடந்துச்சு?

அக்ஷரா சொன்னபடி வெளியே வந்து எனக்கு துணிமணி எடுத்து அனுப்பினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போனதும் போன் பண்ணி பேசினார். இனிமேல் யாரும் என்னை அன்பு காட்டி ஏமாற்ற முடியாது. இனி நான் கேம் விளையாடுவேன் என தாமரை செல்வி கூறியுள்ளார்.

தாமரைச்செல்வி இவ்வாறு பேசிய வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.