பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தமும் ஸ்கிரிப்ட் என்பது போல கணவரிடம் தாமரைச்செல்வி சொல்ல ரசிகர்கள் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Thamarai Selvi About Bigg Boss Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ப்ரீஸ் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களில் உறவினர்கள் உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அவர் பேரை சொல்ல என் நாக்குக்கே தகுதி இல்ல Actor Ravi Mariya Speech | k.balachandhar 7th anniversary

அந்தவகையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் தாமரைச் செல்வியின் மகன் மற்றும் அவருடைய கணவர் உள்ள அனுப்பப்பட்டனர். உள்ளே சென்ற கணவர் தாமரைச்செல்வி செய்த தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். அனைவருக்கும் பாயாசம் கொடுத்து பாவனிக்கு கொடுக்காமல் விட்டது தவறு என சொன்னார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

மேலும் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எதற்கு தேவையில்லாமல் கோபப்படுற, சண்டை போடுற அது பார்க்க பிடிக்கல என சொல்ல நாங்க எங்க மாமா சண்டை போடுறோம், உங்க ஜாலியா தான் இருக்கோம் ஆனா இவங்க தான் சண்டை போடச் சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனை எடிட்டர் எடிட் செய்ய மறந்துவிட்ட நிலையில் ரசிகர்கள் எல்லாம் ஸ்கிரிப்ட் என பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது உள்ளே நடப்பதை அப்படியே காட்டும் ஒரு ரியாலிட்டி ஷோ என கமல் ஹாசன் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் தாமரைச்செல்வி இவ்வாறு சொல்லி இருப்பதற்கு எப்படி பதில் சொல்லப்போகிறார் என்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.