ரஞ்சிதமே பாடலுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை அசைந்து ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தமன். தீவிர விஜய் ரசிகரான இவர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கருவில் இருக்கும் குழந்தையையும் துள்ளி குதிக்க வைத்திருக்கும் ரஞ்சிதமே பாடல்!!… தமன் பகிர்ந்துள்ள எமோஷனல் வீடியோ வைரல்.!

குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கர்ப்பிணி பெண் இப்பாடலை கேட்கும் போது அவரது குழந்தை வயிற்றில் எட்டி உதைத்து துள்ளி குதிப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதன் வீடியோவை அக்குழந்தையின் தாய் தந்தையான இருவரும் பகிர்ந்து ரஞ்சிதமே பாடல் தங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன பாடல் என்றும் கூறியுள்ளனர்.

கருவில் இருக்கும் குழந்தையையும் துள்ளி குதிக்க வைத்திருக்கும் ரஞ்சிதமே பாடல்!!… தமன் பகிர்ந்துள்ள எமோஷனல் வீடியோ வைரல்.!

இதன் வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எவ்வளவு அழகான தெய்வீக உணர்வு. இந்த வீடியோ என் நாளை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துவிட்டது” எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.