சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் தமன்.

Thaman Join With Sivakarthikeyan : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக டான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து மோதல் : கேன் வில்லியம்சன் விலகல்.. புதிய கேப்டனாக டிம் சவுதி..

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இவர்கள் இருவரும் இயக்கும் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

அதாவது பிறந்தநாள் கொண்டாடிய இசையமைப்பாளர் தமனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து கூறி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் புட்ட பொம்மா போல நிறைய ஹிட் பாடல்களை கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு உங்கள் அன்புக்கு நன்றி. தட்டும் தூக்குறோம் என SK21 என்ற ஹாஸ்டேக்குடன் பதிவு செய்துள்ளார் தமன். இதன் மூலம் இருவரும் புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பது உறுதியாகி உள்ளது.