Bigil Movie Updates
நானும் தளபதி ரசிகை தான், ஆனாலும் ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்யுறது சரியில்ல என விஜய் ரசிகர்களை கண்டித்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் நாளை வெளியாக உள்ள பிகில் படத்திற்காக ஆங்காங்கே கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன.

விஜய் ரசிகர்கள் சிலர் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக மண் சோறு எல்லாம் சாப்பிட்டு இருந்தனர்.

அதையெல்லாம் தாண்டி சில ரசிகர்கள் மனதை பதற வைக்கும் அளவில் விஜய்க்காக உடலை வருத்தி கொண்டு சில வேண்டுதல்களை செய்துள்ளனர்.

இந்த வீடியோவை பதிவிட்டு விஜய் ரசிகர்களை கண்டித்துள்ளார் காயத்ரி ரகுராம். நானும் விஜய் ரசிகை தான். படத்திற்காக இப்படியெல்லாம் செய்யாதீர்கள். விஜய் இதையெல்லாம் விரும்ப மாட்டார் என கூறியுள்ளார்.

வேண்டுமென்றால் படத்தை ஒரு தடவைக்கு மேல் திரையரங்குகளில் பாருங்கள் என கூறியுள்ளார்.

அதே போல் விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக பெண்கள் மேல்நிலை பள்ளியில் CCTV கேமரா அமைத்து தருவது குறித்தும் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.