Vijay 65 Shooting details

ஜார்ஜியாவில் நடந்த சம்பவத்தால் குறித்து வெளியான தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Thalapathy65 Sooting Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தினை தொடர்ந்து தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து படக்குழு சென்னை திரும்பியது. தற்போது ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்புகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இங்கு தளபதி விஜய் தீவிரவாதிகளுடன் சண்டையிடும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சிகள் அனைத்தும் செம சம்பவமாக தரமாக வந்துள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொதுவாகவே ஆக்சன் காட்சியில் மிரட்டும் விஜய் தளபதி 65-ல் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி மிரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.