Thalapathy65 Second Schedule Shooting

தளபதி 65 அடுத்த கட்ட படப்பிடிப்பு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy65 Second Schedule Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க ‌‌‌‌ சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. இரவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் வெளிநாட்டிலுள்ள மால் போல அச்சு அசலாக செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.