தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு ட்வீட் படைத்துள்ள சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Thalapathy65 FL Announcement Tweet Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த குழந்தைகள் ஆபாச படங்கள் பகிர்வு – எச்சரித்த நீதிமன்றம்

அதுமட்டுமல்லாமல் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்க யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.! | Public Opinion | Tamil Review | Netflex

இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த ட்விட் 60 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.