Thalapathy65 First Look Poster Update

ஜூன் 21-ல் தளபதி 65 படத்தின் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Thalapathy65 First Look Poster Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த குழந்தைகள் ஆபாச படங்கள் பகிர்வு – எச்சரித்த நீதிமன்றம்

அந்த அறிவிப்பில் தளபதி விஜயின் பிறந்தநாள் விருந்தாக வரும் ஜூன் 21-ஆம் தேதி இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/ULCஇறுக்கமான உடையில் போஸ் கொடுத்த Keerthy Suresh! – வைரலாகும் புகைப்படம் | Cinema News