Master Create New Record
Master Create New Record

தளபதி விஜயின் தங்கையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay‘s Sister Vidhya Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் எஸ் ஏ சி அவர்களின் மூத்த மகனாவார்.

இயக்குனரின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் உச்சத்தை தொட்டுள்ளார் என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.

தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார். ஆனால் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இரண்டு வயதிலேயே உயிரிழந்து விட்டார்.

ஆரம்பத்தில் கலகலப்பான மனிதராக இருந்த விஜய் தன்னுடைய தங்கையின் மரணத்திற்குப் பிறகு அமைதியான ஒருவராக மாறி விட்டார் என அவரது குடும்பத்தார் கூறி கேட்டுள்ளோம்.

இரண்டு வயதிலேயே உயிரிழந்து விட்ட வித்யாவை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் வித்யாவின் அழகிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

முதல் முறையாக தளபதி விஜயின் தங்கையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.