YouTube video

Thalapathy Vijay‘s Master Movie Release on Pongal

Dheena About Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார்.

மேலும் அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லலித் குமாரும் இப்படத்தை தயாரித்துள்ளார்.அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சஞ்சீவ், தீனா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ம் தேதியே இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் கொரானா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. எப்போது படம் ரிலீசானதும் நிச்சயம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள விஜய் டிவி தீனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும். முதல்நாள் முதல் காட்சியில் சவுண்டு கிழியும் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.