Thalapathy Vijay
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மட்டுமே படைத்துள்ள பிரம்மாண்ட சாதனையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இறுதியாக அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ 200 கோடி வசூலை தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது.

மேலும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 3 படங்களுக்கு ரூ 200 கோடி வசூல் கொடுத்த ஒரே நடிகர் தளபதி விஜய் தான் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆம், விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மெர்சல், சர்கார், பிகில் ஆகிய மூன்று படங்களும் ரூ 200 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தன.

அதுமட்டுமில்லாமல் இதுவரை விஜயின் 7 திரைப்படங்கள் ரூ 100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.