மாவீரன் திரைப்படத்தின் FDFS பார்க்க நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாவீரன் திரைப்படம் நேரடியாக வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள இப்படத்தை திரையில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை (FDFS) காண வெற்றி திரையரங்கிற்கு தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா விஜய் வருகை தந்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.