லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாதது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தனது 67ஆவது திரைப்படத்தை நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காஷ்மீரில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் இந்த கொண்டாட்டத்தில் தளபதி விஜய் கலந்து கொல்லாதது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பி இருந்தது. ஆனால் தற்போது அது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி விஜய் அவர்களது படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் அவர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்பட்டு வருகிறது.