Thalapathi Video

Thalapathy Video : தளபதி விஜயின் காரை ரசிகர் ஒருவர் துரத்தி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

நீங்க தல பேனா? தளபதி பேனா? சண்டையை மூட்டி விட்ட வைபவின் பதில்.!

சமீபத்தில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் இருந்து சில வீடியோக்கள் இணையத்தில் கசிந்திருந்தன. அதில் ஒரு வீடியோவில் விஜய் சென்ற காரை ரசிகர் ஒருவர் தன்னுடைய காரில் துரத்தி செல்கிறார்.

அப்போது தளபதி வாரின் காரின் கண்ணாடியை இறக்கி அந்த ரசிகருக்கு ஹாய் சொல்லியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விஸ்டுடன் மங்காத்தா 2 அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு – புகைப்படத்தை பாருங்க.!

இதனை விஜய் ரசிகர்கள் பலர் ரசிகனை ரசிக்கும் தலைவன் என்ற பெயரில் ஷேர் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.