Thalapathy Vijay Upcoming Movies Update
Thalapathy Vijay Upcoming Movies Update

2021 இரண்டு படங்களை எப்படி செய்து 600 கோடி வசூலுக்கு தளபதி விஜய் பிளான் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thalapathy Vijay Upcoming Movies Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வருட கோடை விடுமுறையில் வெளியாகவிருந்த இப்படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் – வெளியானது ஹாட் அப்டேட்.!!(Opens in a new browser tab)

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தளபதி 65 திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அடுத்த வருடத்தில் விஜய் ரூபாய் 600 கோடி வசூலுக்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் அடுத்த வருடத்தில் மட்டுமே விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.