தளபதி விஜயின் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்க போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay Upcoming Movies Directors : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்தடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜயின் அடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார்? ஒரே நேரத்தில் வெளியான சூப்பர் தகவல்கள்.!!

தளபதி 66 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தளபதி 67 படத்தின் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரைத் தொடர்ந்து தளபதி 68 படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. மூன்று படங்களில் இயக்குனர்கள் பற்றிய தகவல் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.