பிரபல தொகுப்பாளினி திருமணத்தில் எதிர்பாராத என்ட்ரி கொடுத்து திருமண ஜோடிக்கு செம சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Thalapathy Vijay Surprise in VJ Anjana Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தன்னுடைய திருமணத்தில் தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து பேசியுள்ளார்.

அதாவது தன்னுடைய திருமணத்திற்கு தளபதி விஜய் வருவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் திடீரென என்ட்ரி கொடுத்து எங்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸ் கொடுத்தார்.

மிக பிரம்மாண்டமான காரில் வந்து இறங்குவார் என நினைத்தால் மிகவும் எளிமையான காரில் வந்திருந்தார் என கூறியுள்ளார். அஞ்சனா பேட்டி ஒன்றில் இவ்வாறு பேசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினி அஞ்சனா கயல் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான சந்திரமௌலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.