Thalapathy Vijay Record in Twitter
Thalapathy Vijay Record in Twitter

தளபதி விஜய் வெளியிட்ட புகைப்படம் டுவிட்டரில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Thalapathy Vijay Record in Twitter : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர்.

இவரது நடிப்பில் வெளியாகப்போகும் மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜய் மகேஷ்பாபு விடுத்திருந்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று தனது வீட்டின் மரக்கன்றை நட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன.

தளபதி விஜய்யின் வெறித்தனம் பாடல் படைத்த புதிய சாதனை – தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

வெறும் 24 மணி நேரத்தில் இப்புகைப்படம் 300K (3 லட்சம்) லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

24 மணி நேரத்தில் ஒரு நடிகரின் புகைப்படம் இவ்வளவு லைக்ஸ்களை பெறுவது இதுவே முதல் முறை என விஜய் ரசிகர்கள் இதனை உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.