Naan Srithaal
நான் சிரித்தால் ட்ரைலரை பார்த்து தளபதி விஜய் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கி தற்போது நடிகராகவும் மீசையை முறுக்கு, நட்பே துணை என வெற்றி படங்களையும் கொடுத்தவர் ஹிப் ஹாப் ஆதி.

தற்போது இவர் நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த ட்ரைலரில் விஜய் கதறி அழும் காட்சியை பார்த்து ஹிப் ஹாப் ஆதி கலகலவென சிரிப்பார்.

அதே போல அஜித் பட காட்சிக்கும் சிரிப்பார். இந்த ட்ரைலரை பார்த்து தளபதி விஜய் சமீபத்தில் நான் பார்த்து சிரித்த ட்ரைலர் இது தான் என படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இதனை திங்க் ம்யூசிக் நிறுவனம் அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.