Thalapathy Vijay Poster Issue in Theni
Thalapathy Vijay Poster Issue in Theni

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை கிழித்தெறிந்த போலீசார் தளபதி ரசிகர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy Vijay Poster Issue in Theni : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது.

இந்த படம் வெகு விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தேனி மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் அடிக்கடி விதவிதமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கடைசி 10 படங்களின் வசூல் என்ன? முழு விவரம்..!

சமீபத்தில் தேனியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் தளபதி விஜயை எம்ஜிஆர் ஆக சித்தரித்து ஒட்டியிருந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகியது. இந்த போஸ்டர்களை பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த இடங்களுக்குச் சென்று போஸ்டரை கிழித்து எறிந்து உள்ளனர். அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.