
Thalapathy Vijay Political : படத்தில் அரசியல் பேசுவதெல்லாம் வேலைக்கு ஆகாது என்பது போல பிரபல நடிகரான தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம் வந்த நடிகர்கள் பலர் திரையுலக வாழ்க்கையின் மூலமாக அரசியலில் நுழைந்துள்ளனர்.
தற்போது தளபதி விஜயும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். அதற்கு சமீபத்தில் வெளியான சர்கார் படமே சாட்சி என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரான பவன் கல்யாண் தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படங்களில் அரசியலில் பேசுவது குறித்து தன்னுடைய கருத்துகளை கூறியுள்ளார்.
படங்களில் அரசியல் செய்வது, அரசியல் வசனங்கள் பேசுவதெல்லாம் வேலைக்காகாது. களத்தில் இறங்கி பேச வேண்டும் என கூறியுள்ளார்.
பவன் கல்யாண் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். எதையும் துணிச்சலாக கேள்வி எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாண் இவ்வாறு பேசி இருப்பது மறைமுகமாக விஜயை தான் விமர்சித்தாரா என்ற விவாதம் சமூக வளையதளங்களில் பரபரப்பாகி வருகிறது.