Vijay Political Poster

தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு அமெரிக்காவாக மாறும் என்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Thalapathy Vijay Political Poster : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு அமெரிக்காவாக மாறும் என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒன்றை ஒட்டி ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த போஸ்டரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் விஜய் உடன் இருப்பது போலவும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.