Thalapathy Vijay Plan to Corona Contribution
Thalapathy Vijay Plan to Corona Contribution

தளபதி விஜய் கொரானா நிவாரண நிதி கொடுப்பதில் வேறொரு பிளான் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

Thalapathy Vijay Plan to Corona Contribution : இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ரீமேக் ஸ்டார் விஜய் என கொண்டாடும் ரசிகர்கள் – அவர் நடித்த சூப்பர் ஹிட் ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ.!

திரையுலக பிரபலங்களும் இதற்காக நிதி உதவிகளை கொடுத்து வருகின்றனர். நேற்று தல அஜித் ரூபாய் 1.25 கோடி நிவாரண நிதியாக கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நிவாரண நிதியாக கொடுக்க ரூபாய் 25 கோடியை ஒதுக்கி உள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இந்த தொகையை நேரடியாக அரசாங்கத்திடம் கொடுக்காமல் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க அவர் முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.