தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருந்த விஜய் மெர்சல் படத்திற்கு பிறகு தளபதி என்ற பட்டத்தை பெற்றார். இது திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உதயநிதியிடம் ட்விட்டர் பக்கத்தில் விஜயயை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர்???? பார்த்து செய்ங்க சார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு உதயநிதி ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் ! என நறுக்கென பதில் கொடுத்துள்ளார்.