Thalapathy Vijay Next Movie Update
Thalapathy Vijay Next Movie Update

சிஎம் கேரக்டர் வேண்டாம் என பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லியுள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Next Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த கூட்டணி முதல் முறையாக முதல்வன் என்ற படத்தில் தான் இணைய இருந்தது. இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் நோ சொன்னதால் அந்த வாய்ப்பு அர்ஜுனுக்கு சென்றது.

தற்போது முதல்வன் 2 படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார் ஷங்கர். மேலும் இப்படத்தில் தளபதி விஜயை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது சங்கர் இப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறியுள்ளார்.

ஓவர் மேக்கப் தான், ஆனால் செம அழகு.. எப்படி இருந்த ரோபோ ஷங்கர் மகள் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

அதற்கு தளபதி விஜய் சிஎம் கேரக்டரா? அதெல்லாம் நமக்கு செட்டாகாது ஆள விடுங்க என்று கூறிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் ஷங்கர், விஜய் கூட்டணியின் முதல்வன் 2 திரைப்படத்தை எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளியான இந்த தகவல் உண்மையாக இருக்கக் கூடாது. ஷங்கர், விஜய் கூட்டணியில் முதல்வன் 2 படத்தில் இணைய வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.