Thalapathy Vijay Next Movie Update
Thalapathy Vijay Next Movie Update

விஜய் நடித்த படம் பற்றி பிரபலம் ஒருவர் அப்டேட் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

Thalapathy Vijay Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? அது என்ன படமாக இருக்கும்? என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தமன் இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

யாரும் எதிர்பார்க்காத கூட்டணி : தல 61 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இவர் தான் – வெளியானது அதிரடி தகவல்.!

இந்த நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பெயரில் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் விஜய் நடித்த படம் நிச்சயமாக துப்பாக்கி 2 தான் என கொண்டாடி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது சந்தோஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கம் தானா என்பது தெரியவில்லை.

ஏற்கனவே விஜய் நடித்த படம் துப்பாக்கி2 தான் என தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.