Thalapathy 65
தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்க போவது யாராக இருக்கும் என்ற தகவல்கள் இணையத்தை கலக்க தொடங்கி விட்டன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது தளபதி 64 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடன் இணைவார்? அந்த கூட்டணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.

சமீபத்தில் கூட வெற்றிமாறன் தளபதி விஜயை சந்தித்து கதை ஒன்றை கூறியதாகவும் அந்த படம் கிட்ட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் தகவல் ஒன்று பரவியது.

இந்நிலையில் தற்போது தளபதியின் அடுத்த படத்தையும் லோகேஷ் கனகராஜே தான் இயக்க உள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.