YouTube video

Thalapathy Vijay New Record – India’s No.1 In Lock Down

Co-Producer About Master Loss : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மலவிக மோகணன், ஆண்ட்ரியா சாந்தனு, ஸ்ரீமன், சேத்தன், ஸ்ரீநாத், தீனா, சஞ்சீவ், வர்ஷா பொல்லம்மா, ரம்யா மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் கொரானா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் சாத்தியமில்லாமல் போனது.

இதனை அடுத்து படத்தை OTT-யில் வெளியிட அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்பார்த்த தொகை கிடைக்காததால் இந்த முடிவை படத்தின் உரிமையை வைத்துள்ள செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைவிட்டுள்ளது.

மேலும் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் மாஸ்டர் திரைப்படம் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாது. நாங்கள் புதிய விநியோகஸ்தர் யாருக்கும் இப்படத்தை விற்கவில்லை. பல ஆண்டுகளாக படங்களை விநியோகம் செய்து வருபவர்களுக்கு தான் கொடுத்துள்ளோம்.

ரிலீசுக்கு முன்பாக அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.