தளபதி விஜயை காண விரும்பி அடம்பிடித்த குட்டி ரசிகைக்கு வீடியோ கால் மூலம் தளபதி விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யை காண விரும்பி அடம்பிடித்த குட்டி குழந்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து அந்த குட்டி ரசிகையின் செல்லமான ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றிய விஜயின் வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, பல்லாவரத்தை சேர்ந்த அபிதா பேகம் என்னும் குழந்தை தனது அழகான மழலை குரலில் விஜய் அங்கிள் என்னை பார்க்க வர மாட்டீங்களா? என்ன கேட்டு அடம் பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தையிடம் வீடியோ கால் செய்து சர்ப்ரைஸ் செய்திருக்கும் தளபதி விஜயின் வீடியோ தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.