LKG Movie

LKG Movie : LKG படத்தில் தளபதி 63 படம் பற்றி இடம் பெற்றிருந்த காட்சியை பற்றி தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியாக பேசி வருகின்றனர்.

ஆர்.ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான LKG படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் தான் ஹீரோ – விஜய் அறிவிப்பு.!

சென்னையில் மட்டுமே இரண்டு நாளில் ரூ 83 லட்சம் வசூல் செய்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் தல தளபதி சம்மந்தப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. ஒருவர் மீடியா கேட்கும் கேள்விக்கு பதிலளித்து கொண்டிருக்கும் போது அவரை கடந்து செல்லும் ரசிகர் ஒருவர் மைக்கை பிடுங்கி தல தான் கெத்து என கூறி விட்டு செல்வார்.

அதே போல் தளபதி விஜய் சம்மந்தமாகவும் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. ஆம் அது என்னவென்றால் FB லைவ் காட்சியில் மக்கள் பதிவிடும் முதல் கருத்து தளபதி 63 அப்டேட் எப்போ? என்பது தான்.

இதனை நன்கு கவனித்த விஜய் ரசிகர்கள் இதனை பற்றிய ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.