thalapathy vijay latest update about tvk party
thalapathy vijay latest update about tvk party

கட்சிக்கொடி மற்றும் கழக பாடலை நாளை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும்,வெங்கட் பிரபு இயக்கத்திலும் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக இறுதிப் படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். இந்தப் படத்தை H.வினோத் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்தப் படம் முடிந்த கையோடு அரசியலில் கவனம் செலுத்த போகும் விஜய் தற்போது கட்சிக்கொடியும், கழக கொடி பாடலும் நாளை வெளியாகும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் ,புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைவதால் அது ஒரு பெரும் வரம்.அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22. நாம் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டில் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக்கொடியை வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழக கொடி பாடலை வெளியிட்டு கழக கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாளை எங்கும் நமது கொடி பறக்கும் தமிழ்நாடு இனி சிறக்கும் வெற்றி நிச்சயம். என்று அறிக்கையை விஜய் வெளியிட்டு உள்ளார்.

இந்த அறிக்கை வெளியாகி தீயாக பரவி வருகிறது.