Thalapathy Vijay in Workout Video

தளபதி விஜயின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Workout Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தளபதி விஜய் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ கில்லி படத்தின் போது எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. இருப்பினும் தளபதி விஜய் இன்னும் இளமையாக இருக்க அவரது ஒர்க் அவுட்டும் ஒரு காரணம் என ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/itz_satheesh1/status/1314833711284674560?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.