புதிய லுக்கில் தளபதி விஜய் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in Vijay 66 Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

புதிய லுக்கில் தளபதி விஜய்.. விஜய் 66 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.!!

வம்சி கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு சரத்குமார் பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலே விஜய்க்கு அம்மாவாக ஜெயசுதா நடிக்கிறார்.

ஏற்கனவே விஜய் இந்தப் படத்தின் பூஜையில் கலந்து கொண்டபோது அவரது லுக் வேற மாதிரி இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் உடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோவில் அவரது லுக் வேற மாதிரி உள்ளது.

புதிய லுக்கில் தளபதி விஜய்.. விஜய் 66 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்.!!

இதனால் இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.