Thalapathy Vijay in Super Good Films

எங்களின் நூறாவது படத்தில் விஜய் நடிப்பார் என சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay in Super Good Films : தமிழ் சினிமாவின் ஏவிஎம் நிறுவனத்திற்கு அடுத்ததாக அதிகமான படங்களை தயாரித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் இது.

தளபதி விஜய்க்கு மிகவும் நெருக்கமான நிறுவனம். ஏனென்றால் விஜய்க்கு கிட்டத்தட்ட ஆறு மெகா ஹிட் படங்களைக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான்.

இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதற்கு சிறிய காலம் இடைவெளி விட்டுருந்தது. தற்போது களத்தில் சந்திப்போம் என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தெரிவித்ததாவது தற்போது படத்தை தயாரிப்பதை விட அதை வாங்கி வினியோகம் செய்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. படப்பிடிப்பு செலவு, நடிகர்கள் சம்பளம் எல்லாம் உயர்ந்து விட்டது.

1 வருடத்திற்கு நான்கு படங்கள் தயாரித்து வந்தோம். அனைத்து குடும்ப படங்களாக இருந்தது தற்போது சூழ்நிலை மாறிவிட்டது நாங்களும் காலத்திற்கேற்ப மாறி இளைஞர்களை கவரும் வகையில் களத்தில் சந்திப்போம் என்ற படத்தை தயாரித்து உள்ளோம்.

இன்னும் இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன. இனி வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். விரைவில் நூறாவது படத்தை எட்டி விடுவோம்.

எங்களின் நூறாவது படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிப்போம். இதற்கு முன்னதாக எங்களது தயாரிப்பில் விஜய் நடித்தாலும் நடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.