தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in Property Value : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?? பிறந்தநாள் தினத்தில் வெளியான ஷாக் ரிப்போர்ட்

தளபதி விஜய் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜயின் மற்ற சொத்து மதிப்பு என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

91 நாளுக்குப் பிறகு, கொரோனா மேலும் குறைவு..முழுவிவரம்..

அதாவது தளபதி விஜய் தற்போது ஒரு படத்திற்கு ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதனால் அவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் 100 கோடி முதல் ரூபாய் 120 கோடி வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Maanaadu படத்தின் 5 அதிரடி அறிவிப்புகள்! – குஷியில் STR ரசிகர்கள்! | Silambarasan TR | Venkat Prabhu

அதுமட்டுமல்லாமல் சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் போன்ற இடங்களில் தளபதி விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள் உள்ளன. விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ள நிறுவனங்களிடம் இருந்து ரூபாய் 10 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.

மேலும் நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.

இதனால் தளபதி விஜயின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் 410 கோடி எனவும் அமெரிக்க மதிப்பில் 56 மில்லியன் டாலர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.