Thalapathy Vijay in Prashant Neel Direction

கேஜிஎப் பட இயக்குனர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக இணையத்தில் தீயாக தகவல் பரவி வருகிறது.

Thalapathy Vijay in Prashant Neel Direction : தமிழ் மற்றும் கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். யாஷ் நாயகனாக நடித்திருந்த இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்திலே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இயக்கி வருகிறார்.

இந்தநலையில் தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் தளபதி 65 படத்தில் நடிப்பதை தொடர்ந்து கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று காட்டு தீ போல பரவி வருகிறது. மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் ஃபான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தினை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. காரணம் இரண்டு தரப்பில் இருந்தும் இதுவரை எந்த தகவலும் அறிவிப்பும் வெளியாகவில்லை என தெரிய வந்துள்ளது.