தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். முருகதாஸின் பிறந்த நாள் விருந்தாக நேற்று மாலை 6 மணிக்கு சர்கார் சிங்கிள் டிராக் வெளியாகி இருந்தது.

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் முருகதாசிற்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முருகதாஸின் பிறந்த நாளை படக்குழுவினருடன் கொண்டாடி உள்ளது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் தளபதி விஜயும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் செம வைரலாகி வருகின்றனர். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு கலக்கல் சினிமா பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.