Thalapathy Vijay in Latest Autograph Photo

தளபதி விஜயின் புதிய ஆட்டோகிராப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Latest Autograph Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன.

படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் நெல்சன் திலிப் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

மேலும் நேற்று தளபதி விஜயின் புகைப்படம் ஒன்று லீக்காகி இருந்தது. இப்படியான நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். வித் லவ் என குறிப்பிட்டு விஜய் என கையெழுத்திட்டுள்ளார்.

இதுவரை அன்புடன் விஜய் என கையெழுத்திட்டு வந்த தளபதி தற்போது அவரது கையெழுத்தை மாற்றியுள்ளார்.