Thalapathy Vijay in Kutty Story Photo
Thalapathy Vijay in Kutty Story Photo

விஜய் இன்னொரு குட்டி கதையை சொல்வது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Kutty Story Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்குஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர்.

மேலும் ஆண்ட்ரியாவும் வில்லி வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சாந்தனு உட்பட இன்னும் பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முருகதாஸ் பெயரில் தளபதி 65 என வெளியான புகைப்படம் – திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள், காரணம் இதுதான்.!

தளபதி விஜய் பொதுவாக அவருடைய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் ஒரு குட்டி கதை சொல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது புகைப்படம் வாயிலாக ஒரு குட்டி கதை சொல்வது போல விஜய் ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வடிவமைத்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படம் விஜய் சொல்லும் குட்டிக் கதையை விஜய்யே அமர்ந்து கவனிப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.