கடைசியில் நடிகர் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் கேமியோ நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. விஜய் இந்த படத்தில் நடிப்பதாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்த போது தளபதி விஜய் இதில் பங்கேற்று இருக்கலாம் ஆனால் அப்போது ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை. இதனால் விஜய் ஜவான் படத்தில் நடிக்கவில்லை என சொல்லப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.