Thalapathy Vijay House Budget

தளபதி விஜய்யின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு மட்டும் எத்தனை கோடி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Thalapathy Vijay House Budget : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. காரணம் கொரானா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியாகும் முதல் பேன் இந்தியா திரைப்படம் மாஸ்டர் தான்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் நீலாங்கரை வீட்டின் மதிப்பு என்ன என்பது தெரியவந்துள்ளது. ரூபாய் 140 கோடி மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக தளபதி விஜய் இந்த வீட்டை கட்டி உள்ளாராம்.

வீடு கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அவர் பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் ஓபனாக பேசியுள்ளார்.