Thalapathy Vijay Helps to Pregnant Lady
Thalapathy Vijay Helps to Pregnant Lady

மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்கு தளபதி விஜய் உதவி உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy Vijay Helps to Pregnant Lady : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் முடக்கத்தில் இருந்து வருகிறது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

அதேபோல் தென்காசியை சேர்ந்த அமீன், கன்சுலாபீவி என்ற தம்பதியர் தேனியில் புதிதாக குடியேறியுள்ளனர்.

இது என்ன சோதனை : கைவிரித்த தயாரிப்பாளர்கள், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஜய் – மாஸ்டர் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்.!

புதியதாக திருமணமான கன்சுலா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். புதியதாக குடியேறியதால் இவர்களுக்கு குடும்ப அட்டையும் இல்லை. இதனால் அரசு அளிக்கும் இலவச பொருட்கள் கிடைக்கவில்லை.

அமீனுக்கு வேலையும் இல்லாததால் கையில் பணமும் இல்லை. இதனையறிந்த தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் இதனை தளபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதனை அடுத்து விஜய் உடனே அந்த குடும்பத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்து உதவியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.

Thalapathy Vijay Helps to Pregnant Lady
Thalapathy Vijay Helps to Pregnant Lady