கொரானா அச்சத்தில் தவித்த நண்பனுக்கு தளபதி விஜய் ஓடிச்சென்று உதவியுள்ளார்.

Thalapathy Vijay Help to Sanjeev : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

இதற்கு திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் முக்கியமான ஒருவர் சஞ்சீவ்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருபவர் சஞ்சீவ். தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு கோவிட் பாசிட்டிவ் இருக்கலாம் என பயந்து தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அவருடைய வீட்டிற்கு அனுப்பி விட்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Copy linkநானும் மனுஷி தானே.. சூர்யா தேவிவுக்கு உதவ முன் வருவதாக… அண்டர் பல்டி அடித்த நடிகை வனிதா!

இதனை அறிந்த விஜய் சஞ்சீவ்விற்கு போன் செய்து என்ன ஆச்சு என விசாரித்துள்ளார். அதற்கு சஞ்சீவ் காய்ச்சலா இருக்கு கொரானாவா இருக்குமோ என பயமாயிருக்கு என கூறியுள்ளார்.

அதன் பிறகு டெஸ்ட் எடுத்துட்டியா என விஜய் கேட்க இல்லை நாளைக்கு தான் எடுக்க போகிறேன் என சஞ்சீவ் கூறியுள்ளார். பேசி முடித்துவிட்டு 15 நிமிடத்திற்குள் மீண்டும் சஞ்சீவ்விற்கு போன் செய்து உள்ளார் தளபதி விஜய்.

உனக்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளேன் கீழே இறங்கி வா என கூறியுள்ளார் விஜய். ஆனால் சஞ்சீவ் எனக்கு பயமா இருக்கு நான் கேட்டை தாண்டி வர மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து விஜய், சஞ்சீவ் வீட்டு செக்யூரிட்டியிடம் சாப்பாடு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். மேலும் செக்யூரிட்டியை தூரத்தில் சாப்பாடை வைத்து விட சொல்லி அதன் பிறகு அதை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் சஞ்சீவ்.

இவ்வாறு சஞ்சீவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜய் தனக்கு உதவியது குறித்து பேசியுள்ளார்.