Thalapathy Vijay Guardian Death
Thalapathy Vijay Guardian Death

தளபதி விஜய்யின் பிறந்த நாள் நெருங்கும் வேளையில் அவரது பாதுகாவலர் மரணமடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Thalapathy Vijay Guardian Death : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அதனை பிரமாண்டமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர்.

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த வருத்தத்துடன் இன்னொரு ஒரு சோகச் செய்தியும் சேர்ந்துள்ளது.

ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள் தளபதி 65 குறித்துத்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தளபதி விஜயின் பாதுகாவலராக இருந்து வந்த தாஸ் சேட்டன் என்பவர் உயிரிழந்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் விஜய் மட்டுமல்லாமல் பல திரையுலக பிரபலங்களுக்கு பாதுகாவலராக இருந்து வருகிறார்.

இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.