Thalapathy Vijay gave The Goat Trailer Update
Thalapathy Vijay gave The Goat Trailer Update

கோட் படத்தின் டிரெய்லர் தேதியை சொன்ன விஜய்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், வெளியாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 5 தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சுதந்திர தின ஸ்பெஷலாக தளபதி விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்ற தகவலை போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.