Thalapathy Vijay Funny Video

நடிகர் விஜய்யின் பழமையான வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Thalapathy Vijay Funny Video : திரைப்பட துறையில் நடிகர் விஜய் தனது கடின முயற்சியினால் முன்னேறி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நடிகராக மட்டும் இல்லாமல் பிண்ணனி பாடகராகவும் தயாரிப்பாளராகவும் சாதனை படைத்து ரசிகர்கள் மத்தியில் இளைய தளபதியாக கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு விஐய், ஜெனிலியா, வடிவேலு, பிபாஷா பாசு, ரகுவரன் ஆகியோர் நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சச்சின் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் ஜான் மகேந்திரனிடம் சச்சின் பார்ட் – 2 படம் உருவாக வாய்ப்புள்ளதா என்று கேட்ட போது கண்டிப்பாக அப்படி ஒரு படத்தில் நான் விஜயை பார்க்க ஆசைப்படுகிறேன். அது நான் இயக்கினாலும் சரி வேறு எந்த இயக்குனர் இயக்கினாலும் சரி மீண்டும் விஜயை சச்சின் படத்தில் வரும் கூலான கதாபாத்திரத்தை காண விரும்புகிறேன். அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து சச்சின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் மனைவி சங்கீதாவிடம் யாருடன் ஜோடியாக நடித்தால் உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்ட போது ஜெனிலியாவுடன் உள்ள கெமிஸ்ட்ரி எனக்கு பிடிக்கும் என பதில் அளித்திருந்தார்‌.

இந்நிலையில் ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கை அடிப்பட்டு கட்டு போட்டிருந்த நிலையிலும் கூட வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி இந்த பதிவு உனக்காக விஜய் நான் என்றும் உனது வெற்றியை கொண்டாடுவேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜய்‌ ஹெல்மெட் அணிந்து பைக்கில் ரோட்டில் இருந்த சிலரிடம் தனலெட்சுமி அவென்யூ கஸ்தூரிபாய் நகருக்கு எப்படி செல்வது என வழி கேட்டுள்ளார்.மேலும் நடிகர் விஜய்‌ அங்கு தான் இருக்கிறாரா என்றும் விசாரித்த பழைய வீடியோ காட்சியை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.